பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கேத்ரீனா கைஃப். இவர் தற்போது சினிமாவில் நடிப்பதையும் தாண்டி மேக்கப் உபகரணங்களையும் தயாரித்து வருகிறார். கே பியூட்டி என்று பெயரிடப்பட்டு வெளியாகும் அவருடைய பிராண்ட் மேக்கப் உபகரணங்களை அறிமுகம் செய்ய பல திரை பிரபலங்களை வைத்து வீடியோ ஷூட் நடத்தினார்.

Advertisment

nayan kat

கே பியூட்டி விளம்பரத்தில் நடிகை கேத்ரீனா கைஃப்புடன் பல்வேறு முன்னணி நடிகைகளும் இணைந்து நடித்திருந்தனர். அவர்களில் தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவும் இடம்பெற்றார்.

alt="kaithi" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="6960ba85-b521-4e24-9bd3-39132f96af90" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-kaithi_0.png" />

Advertisment

இந்நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில், “தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு நன்றி. இடைவிடாத பணிகளுக்கு மத்தியிலும் கே பியூட்டி வெளியீட்டுக்காக மும்பைக்கு பறந்து வந்ததற்கு நன்றி. நீங்கள் மிகவும் தாராள மனதுடையவர். என்றென்றும் நான் உங்களுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்” என்று கூறி பதிவிட்டுள்ளார்.